இந்திய மொழிகளின் இசையரசி ஆஷா போஸ்லே மறைவிற்கு நடிகரும், முன்னாள் எம்பியுமான ராமராஜன் இரங்கல்!
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) இசை உலகின் ஈடிணையற்ற குரலுக்கு சொந்தக்காரரான பத்மவிபூஷன் ஆஷா போஸ்லே மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது இரங்கல் அறிக்கையில், 20க்கும் மேற்பட்ட
Ramarajan


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

இசை உலகின் ஈடிணையற்ற குரலுக்கு சொந்தக்காரரான பத்மவிபூஷன்

ஆஷா போஸ்லே மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது இரங்கல் அறிக்கையில்,

20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இசை ரசிகர்களை தன் வசீகர ராகத்தால் சகோதரி லதா மங்கேஷ்கர் போல உலகமெங்கும் ஒருசேர எண்ணற்ற ரசிகர்களை பெற்று மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஒப்பற்ற பாடல்களை பாடி உயர்ந்த இடத்தில் விளங்கி வந்தவர் ஆஷா போஸ்லே அவர்கள் .

இசை உலக மாமேதை என் அண்ணன் இசைஞானி முதன்முறையாக தமிழ் திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடித்த

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில்..... செண்பகமே செண்பகமே... என பாடவைத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கடந்த 39 வருடங்களாக முணுமுணுக்க வைத்த இசை குரல் இனியவர் அம்மா ஆஷா போஸ்லே அவர்கள்....அதோடு புதுப்பாட்டு படத்தில் எங்க ஊரு காதலைப்பற்றி என்ன நினைக்கிற... னு பாடி பாட்டின் வரிகளுக்கு மேலும் அழகு சேர்த்தவர் ஆஷா அம்மா.

அப்படிப்பட்ட திறமையும் எப்போது எவருக்கு பாடினாலும் அன்றைய டிரெண்ட் டோனுக்கு ரிங்டோனாக மாறக்கூடிய, மாற்றக்கூடிய காந்த ஈர்ப்பு கொண்ட அம்மா வின் மறைவு, இசை உலகிற்கும் மட்டுமின்றி இனி வருபவர்களுக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

அம்மா ஆஷாவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உலகில் உள்ள அவரது இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இந்திய அரசாங்கம் இனி வரும் காலங்களில் இசையில் சாதித்தவருக்கு அவரின் பெயரில் விருது வழங்கிட ஆலோசிக்க வேண்டுகிறேன் என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN