Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 13 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சமத்துவபுரம் அருகே மண்டபத்திலிருந்து வேதாளை நோக்கி வந்த இருசக்கர வாகனமும் வேதாளையிலிருந்து மண்டபம் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேதாளை பகுதியைச் சேர்ந்த கபிலன் வயது 17, குஞ்சார்வலசையைச்சேர்ந்த ரித்தீஷ் வயது 20 ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆறு வயது பெண் குழந்தை நதியா ஸ்ரீ மற்றும் அவரது தாய் கௌசல்யா பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடல்களை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P