மருத்துவர் இராமதாஸ் விரைந்து நலம்பெற வேண்டும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச) தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் எஸ். இராமதாஸ் அவர்களின் உடல்நிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூல
Cm


Dr.Ramadoss


Hh


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச)

தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் எஸ். இராமதாஸ் அவர்களின் உடல்நிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது,

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் இராமதாஸ் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடைய உடல்நிலை தற்போது சீராக தேறி வருவதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுவாழ்க்கையில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் முழுமையாக குணமடைந்து, மீண்டும் தனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.

அவருடைய உடல்நலம் விரைவில் முழுமையாக சீராக வேண்டும் என்றும் முதல்வர் தனது பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசியல் வட்டாரங்களிலும், ஆதரவாளர்களிடமும் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ