தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட இளைஞர்கள் - சமாளித்த வேட்பாளர்
தருமபுரி, 13 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மொரப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மொரப்பூர் பகுதியில் உள்ள கலைஞர் நகர். M.
திமுக


தருமபுரி, 13 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மொரப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

மொரப்பூர் பகுதியில் உள்ள கலைஞர் நகர். M. வேட்ரப்பட்டி அண்ணல் நகர்

நடுப்பட்டி மோட்டூர் ஆகிய பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அண்ணல் நகர் பகுதியில் பிரச்சாரத்தின் போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் திமுக

வேட்பாளரிடம் அரூர் பகுதிக்கு திமுக என்ன நலத்திட்டம் செய்தது.

இங்குள்ள இளைஞர்கள் விளையாட்டு துறையில் சிறப்பாக விளையாடுகின்றனர்.

ஆனால் இப்பகுதி இளைஞர்களுக்கு போதிய விளையாட்டு உபகரணங்கள் கிடையாது, என்றும் ஒன்றிய குழு

தலைவர் எதையும் செய்யவில்லை உதயநிதி ஸ்டாலினா வந்து செய்யப் போகிறார் என்றும்

திமுக வேட்பாளரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இவ்வாறு கேள்வி கேட்ட இளைஞர்களால் திகைத்த திமுக வேட்பாளர் சண்முகம் பின்னர் சுதாரித்துகொண்டு

தற்போது தான் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன் வெற்றி பெற்றவுடன்

தங்கள் பகுதிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும், இப்பகுதிக்கு தேவையான

வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

வேட்பாளரிடம் கேள்வி கேட்ட இளைஞர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam