கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி தீவிர பிரச்சாரம்
கோவை, 13 ஏப்ரல் (ஹி.ச.) கோவை ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்ச
ப


கோவை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய மக்கள் வேட்பாளர் கே.ஆர். ஜெயராம்,

கோவையின் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பதையும், அமைக்கப்பட்ட சாலைகளும் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும்,அவை தற்போதைய அரசால் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி,

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பல கட்சிகளுக்கு சென்று தாவி வந்தவர் எனவும் அவர் யார் என்று மக்களுக்கு தெரியாது என தெரிவித்தவர் தவெக இந்த தொகுதியில் கணக்கில் இல்லை என விமர்சித்தார்.

மேலும், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J