ஐஸ்கிரீம் கடையில் தீவிபத்து - ராஜஸ்தான் தம்பதி உயிரிழப்பு
ராணிப்பேட்டை, 13 ஏப்ரல் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் மகாவீர் என்ற ஐஸ்கிரீம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் வழக்கம்போல் இன்று
தீ


ராணிப்பேட்டை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் மகாவீர் என்ற ஐஸ்கிரீம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் வழக்கம்போல் இன்று கடையை திறந்து தனது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது கடையின் உரிமையாளரான பேருலால் என்பவரின் மனைவி சுந்தரிதேவி (48) என்பவர் ஐஸ்கிரீம் ரெடி செய்வதற்காக கேஸில் பால் காய்ச்சி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் நிற்கவைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வாகனத்தில் பேட்டரி எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதால் அதிலிருந்து தீப்பொறியானது கடை முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தீயானது முழுவதுமாக பரவியதால் கடையில் உள்ளே சிக்கி கொண்ட கணவன் பேருலால் (43) மற்றும் அவரது மனைவி சுந்தரிதேவி (48) ஆகிய இருவரும் உடல் முழுவதும் தீயில் கருகி பலத்த காயமடைந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்து விட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் கடையில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைக்கும் பணியில் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தீ விபத்து காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு கணவன் மனைவி இருவரும் ஐஸ்கிரீம் கடை நடத்திவரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இருவரும் தீயில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam