முன் விரோதம் காரணமாக இரட்டைக் கொலை - ஒருவர் கைது!
மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டத்தில் இரட்டை கொலை சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒத்தக்கடை அருகே உள்ள பட்டணம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி
Arrest


மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டத்தில் இரட்டை கொலை சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒத்தக்கடை அருகே உள்ள பட்டணம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியின் மகன் கடுகு என்றழைக்கப்படும் முனியசாமி (23) மற்றும் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (25) ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்பிருந்த பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, பொட்டுக்கடலை என்றழைக்கப்படும் பெரியசாமி, சக்திமுருகன், அருள்முருகன், குணல் மற்றும் அழகர் என்றழைக்கப்படும் அழகர்சாமி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் அரிவாள் போன்ற கொலை ஆயுதங்களுடன் இருவரையும் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பட்டணம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அழகர்சாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

மேலும், இந்த இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN