Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த 2025 நவம்பர் மாதம் 13ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
அந்த சீராய்வு மனு வரும் புதன்கிழமை நீதிபதிகள் வினோத் சந்திரன், விபுல்.M.பஞ்சோலி முன்பு நீதிபதியின் அறையில் வைத்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆனால், மேகாது அணை தொடர்பான சீராய்வு மனுவை நீதிபதியின் சேம்பரில் விசாரிக்காமல், வழக்கமான நடைமுறையில் நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் எடுத்து வைக்க வேண்டியது உள்ளது என முறையீடு செய்தார்.
அதற்கு தலைமை நீதிபதி இந்த முறையீட்டை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13ம் தேதி தடை விதிக்க மறுத்தது.
மேலும் , மேகதாது அணை தொடர்பாக DPR தயாரிக்க அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அச்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது.
எனவே DPR அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கப்படும் போது அதனை இறுதி செய்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்தை கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்து.
இதனையடுத்து, மேகதாது அணை திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு கடந்த 2025 டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam