Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச)
நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்து மத்திய-மாநில அரசுகள் இடையே புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,
நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு தங்களது அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தக் கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை; பேச வேண்டிய அவசியமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கூறிய “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் உரிமை” என்ற விளக்கத்தையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “அது உண்மையெனில், அந்தக் கடிதத்தை பொதுமக்கள் முன் வெளியிடத் தயாரா?” என நேரடியாக சவால் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, மத்திய-மாநில உறவுகள் மீதான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ