Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டி, பாமக வேட்பாளர் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முன்கூட்டியே 48 மணி நேரத்திற்கு முன்பாக உரிய முறையில் அனுமதி கோரி விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அனுமதி கடைசி நேரத்தில் வழங்கப்படுவதால் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியவில்லை என்றும், இதனால் இன்று நடைபெறவிருந்த பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் திலகபாமா ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு இல்லாததுதான் அனுமதி வழங்குவதில் தாமதத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ