பெரம்பூரில் TVK பெயர் தவறாக பயன்படுத்தல் - வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது “TVK” என்ற பெயரை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெரம்பூர் வேட்பாளராக போட்
Ge


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது “TVK” என்ற பெயரை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெரம்பூர் வேட்பாளராக போட்டியிடும் வேணுகோபால் மீது, தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், தேர்தல் பிரச்சாரத்தின் போது “TVK” என்ற பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர் வேணுகோபாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குற்றச்சாட்டு தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ