Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி , 13 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் நாளை (ஏப்.14) வெளிநோயாளர் (OP) சேவை நடைபெறாது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
சில நிர்வாக காரணங்களால் வெளிநோயாளர் பிரிவு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமாக சிகிச்சைக்காக வருவோர் மாற்று நாளில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளும் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்றும், அவசர தேவையுள்ள நோயாளிகள் சிகிச்சை பெற எந்தவித தடையும் இருக்காது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA