Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஸ்வேதா. இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தையும் உள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு நாளடைவில் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ஆத்திரமடைந்த சூர்யா, தனது மனைவி ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தன்வந்திரி நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூர்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN