Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
புலி திரைப்படத்தின் வருமானத்தை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
வருமானத்தை மறைத்ததாகக் குற்றம் சாட்டி, ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தனி நீதிபதி அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து, நடிகர் விஜய் தற்போது சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ