ராசிபுரம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணாமலை தேர்தல்  பிரச்சாரம் - வழி நெடுங்கிலும் தோழமைக் கட்சிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
நாமக்கல், 13 ஏப்ரல் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில துணை தலைவர் வி பி துரைசாமி மகன் பிரேம்குமார் என்பவரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ம
அண்ணாமலை


நாமக்கல், 13 ஏப்ரல் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில்

போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில துணை தலைவர் வி பி துரைசாமி மகன் பிரேம்குமார் என்பவரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராசிபுரம் பகுதிக்கு வருகை தந்தார்.

பின்னர், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பிரேம்குமாருக்கு ஆதரவாக

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

முன்னதாக, அண்ணாமலையை வரவேற்கும் விதமாகவும் கட்சி நிர்வாகிகளை உற்சாக

படுத்தும் விதமாகவும் மேள தாளத்துடன் கிராமிய நடனம் ஆடி வரவேற்பு நிகழ்வு

நடைபெற்றது.

வேட்பாளர் பேசுகையில், நான் வெற்றி உடன் சாலை வசதி மின்விளக்கு வசதி

ஏற்படுத்தி தருவேன் உங்கள் வீட்டு பிள்ளையாக வாக்களியுங்கள் என்று கூறினார்.

தொடர்ந்து, அண்ணாமலை பேசுகையில்,

வெயில் பொருட்படுத்தாமல் வந்திருந்த

அனைவருக்கும் நன்றி அதிமுக தலைமையில் உங்கள் முன்னால் வாக்கு கேட்டு

வந்துள்ளோம் மே நான்காம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் உறுதியான மாற்றத்தை

பார்க்க போகிறோம்.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பார்த்து விட்டேன் மக்கள் தெளிவாக உள்ளனர்

திமுக வேண்டாம் என்று தெளிவாக இருப்பதாக தெரிவித்தார் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் அவருடைய தந்தையார் சமூக நீதி காவலராக இருக்கிறார்

வி பி துரைசாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மீண்டும் தனது மகனை கிராமத்திற்கு சேவை செய்ய அர்ப்பணித்துள்ளார் என்று

பேசினார்.

பாஜக சார்பில் போட்டியிடும் போது வெற்றி பெற்றவுடன் ராசிபுரத்திலேயே

மருத்துவமனை கட்ட வேண்டும் ராசிபுரம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்

தெரிவித்தார்.

வேட்பாளர் உடன் ஐந்தாண்டு காலமாக பயணம் செய்து வருகிறேன்

தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தினார். ராசிபுரம் தொகுதி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பது அனைவரும் அறிந்த தகவல் ஒருமுறைதான் திராவிட முன்னேற்ற கழகம் சென்ற முறை வெற்றி

பெற்றார்கள் அதற்கு முன்னால் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்றது.

இந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பாமகவின் கோட்டை என்பதும் அனைவரும் அறிந்தது. மேலும் அன்புமணி ராமதாஸ் என்னுடன் பேசும் பொழுதெல்லாம் ராசிபுரம் பரமத்தி வேலூர் பாட்டாளி மக்கள் எவ்வாறு வேலை செய்து வருகின்றன என்று கேட்பார் தற்போது ராசிபுர பகுதியில் தோழமைக் கட்சிகள் தோளோடு தோல் நின்று இருப்பது வேட்பாளர்

டாக்டர் பிரேம் குமாரை வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று

தெரிவித்தார்.

தொடர்ந்து, ராசிபுரம் வேட்பாளர் பிரேம் குமார் மோடி அவர்களின் தூதுவன் ஆக

வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக வந்துள்ளார்.

ஜனநாயகத்தின்

அனைத்து தலைவர்களும் இணைந்து ராசிபுரம் வேட்பாளரை அனுப்பி உள்ளனர் ஆனால்

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆக இருக்கக்கூடிய மதிவேந்தன் என்பவர்

கோபாலபுரத்தின் கொத்தெடுமை தூதுவனாக வந்துள்ளார்.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் இது மட்டும் தான் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் முன்னதாக பிரச்சாரத்தில் விபி ராஜன்

என்பவர் திமுக MLA பேசும்போது இன்ப நிதியை முதலமைச்சராக்கி தான் நான் இறந்தே போவேன் என்று பேசினார். அந்த மாதிரியான குடும்பத்தில் இருந்து நாங்கள்

வரவில்லை.

ராசிபுரம் தலையெழுத்தை மாற்ற டாக்டர் பிரேம் குமாரை ஆதரிக்க வேண்டும் தேசிய

ஜனநாயகத்தின் வெற்றி வேட்பாளராக வெற்றி சின்னமாக தாமரை சின்னத்தில் வாக்களிக்க

வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். ராசிபுரத்தில் தாமரை சின்னமானது இரட்டை

இலையோடு இருக்கிறது மாம்பழத்தில் இருக்கிறது குக்கரில் இருக்கிறது தொடர்ந்து சின்னமானது தாமரையில்தான் நின்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் ராசிபுரத்தில் போட்டியிடும் டாக்டர் பிரேம்குமார் நல்லா வேட்பாளர் அவரை தவற விடாதீர்கள் ராசிபுரம் பகுதியில் இரண்டு ஆண்டு காலம் இதே பகுதியில்

கல்வியை படித்து இருக்கிறேன் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்

வகுப்பு இதே பகுதியில் தான் படித்தேன். ராசிபுரம் மக்களின் கஷ்டங்களை

அனைத்தும் அறிந்தவன் நான் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை 8 km தொலைவில்

கட்டி உள்ளனர் ஊருக்கு பேருந்து வருவது குறைவு அதற்கு மேல் 10 மணிக்கு

பேருந்துகளே கிடையாது.

தற்போது தான் யோசித்தேன் திமுக காரர்களும் திருட்டும் ஒன்றாக தான் பிறந்தது

படையப்பா ரியல் எஸ்டேட் நிறுவனம் கே என் நேரு குடும்ப உறவு அந்த ரியல் எஸ்டேட்

நிறுவனம் நிலத்தை வாங்கி தானம் செட்டில் செய்கிறார்கள்.

8 ஏக்கர் தானம் செய்து

ராசிபுரம் நகராட்சி மாற்றம் திமுகவிற்கு பெரும்புள்ளிகளுக்கு நேரடியாக தொடர்பு

உள்ள பகுதி ராசிபுரம்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மதிமுக மக்கள் நீதி

மையம் அனைவரும் இணைந்து பேருந்து நிலையத்தை மாற்றக்கூடாது என்று தெரிவித்தனர்.

ஆனால் திமுக தலைமை முதல் கிளைச் செயலாளர் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு புதிய பேருந்து நிலையத்தை 8 கிலோமீட்டர் தொலைவில் மாற்றி உள்ளனர்.

கோபாலபுரத்தின்

ஊழல் ராசிபுரம் பேருந்து நிலையம் வரை சென்றுள்ளது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்

மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் ஏற்படும் என்று கூறினார்.

மேலும் வெயிலை பொருட்படுத்தாமல் நீங்கள் நிற்பதற்கு காரணம் ஆட்சி

மாற்றத்திற்கு மட்டுமே தான். நாமக்கல் பகுதி மற்றும் ராசிபுரம் பகுதிகளில்

கைத்தறி தொழில் மட்டும் தான் திமுகவின் சில நண்பர்கள் திராவிட ஆனந்த் இந்த

பகுதியில் உள்ளார் அவர் கிட்னி திருடன் ஆட்களை பிடிப்பது தான் அவருடைய வேலை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனிடம் அழைத்து செல்கிறார்.

மருத்துவமனையில் கிட்னியை எடுத்து விடுகிறார்கள் 250 கிட்னியை நாமக்கல்

மாவட்டத்திற்குள் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட ஆனந்தும் இணைந்து கிட்னி

திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது திராவிட மாடல் அரசு அல்ல கிட்னி திருட்டு அரசு என்பது தான் சரியாக

இருக்கும் கிட்னி திருட்டு அரசு என்றுதான் அழைக்க வேண்டும் என்று பேசினார்.

அதிமுக தலைமையில் எடப்பாடி ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருட்டு ஈடுபட்ட

அனைவரும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று பேசினார்.

இதை கவனிக்க வேண்டிய அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லும்போது இதை கிட்னி

திருட்டு என்று சொல்லாதீர்கள் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்று

கூறினார். மா சுப்பிரமணி அய்யா உங்களுடைய கிட்னியை திருடினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்களிடம் இரண்டு கிட்னி உள்ளது ஒரு கிட்னியை திருடினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

உலகத்தில் நடைபெறாத அநியாயம் ராசிபுரம் பகுதியில் நடைபெற்று உள்ளது

பொதுவெளியில் இருக்கும் கரண்ட் கம்பங்களில் விளக்கு எறிவதில்லை

ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுப்பதற்கு ராசிபுரம் நகராட்சியில் பணம் இல்லை.

ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க முடியாமல் ஒப்பந்தாரம் சென்று விட்டார். பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் நாமக்கல் சாலை ஐ மாஸ் விளக்கு

எரிவதில்லை. இதையெல்லாம் கடந்து ராசிபுரம் நகராட்சி சேர்மன் ராசிபுரம்

நகராட்சி கூட்டத்தை வீட்டில் தான் நடத்துகிறார்கள் வீட்டில் 22 தீர்மானங்களை

நிறைவேற்றியுள்ளார்.

நகராட்சி சேர்மன் அவர்களுடைய கணவர் உலகம் தர வாய்ந்த நம்பர் ஒன் பிராடு சங்கர் எதற்காக இவர்கள் பெயரில் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.என்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam