Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இன்று வரை பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் விவரங்கள்:
ரொக்கத் தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 83,03,266/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலவசப் பொருட்கள்: வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 13,71,671/- மதிப்பிலான இலவசப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபானங்கள்: விதிமீறலாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,44,499/- மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, ஆவணங்களின்றி அதிகப்படியான பணம் அல்லது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b