Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 13 ஏப்ரல் (ஹி.ச)
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, இன்று
(13.04.2026 - திங்கட்கிழமை) பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
206 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 840 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 449 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 473 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
191 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 706 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 845 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
102 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 302 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 450 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 532 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பும், அதனால் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமுமே இந்திய பங்குச் சந்தையில் இன்றைய வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b