Enter your Email Address to subscribe to our newsletters

கர்னால், 13 ஏப்ரல் (ஹி.ச.)
டெல்லியிலிருந்து சண்டிகருக்குப் பழைய இரும்பு மற்றும் உலோக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி, ஹரியானா மாநிலம் கர்னால் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்றபோது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
லாரியின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்புவதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, தீயணைப்புத் துறைக்கும், நெடுஞ்சாலை காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீர்கள், பல வாகனங்களின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
தீ விபத்தால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இது குறித்து கர்னால் நெடுஞ்சாலை காவல் நிலைய அதிகாரி தர்ஷன் சிங் கூறுகையில்,
தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால் லாரியில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. டெல்லியிலிருந்து சண்டிகர் சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அருகிலுள்ள வாகனங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
லாரியில் ஏற்றப்பட்டிருந்த பழைய இரும்புப் பொருட்களுக்கு இடையே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்திருக்கலாம், அல்லது வாகனத்தின் எஞ்சின் அதிக சூடாகி தீப்பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b