Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் எம்எல்ஏ அருளை ஆதரித்து சேலம் பள்ளப்பட்டியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர் ராமதாஸ் மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலமாக குரங்கு சாவடி பகுதியில் உள்ள கோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சு திணறல் சரியான பின்பு இரவு 10 மணி அளவில் அங்கிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கண்காணிப்பில் இருந்தார் பின்பு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தரன் மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்து செல்லப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN