Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி இரவு வரை மூடப்பட வேண்டும்.
புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை, சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b