ஜெ.பி.நட்டா மற்றும் பியூஷ் கோயல் நாளை பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள் - தமிழிசை தகவல்
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தி நகரில் பாஜக மூத்த தலைவர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர், மயிலாப்பூரில் எனக்கு அபரிமித ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்க
Tamilisai Soundararajan


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தி நகரில் பாஜக மூத்த தலைவர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அப்போது பேசிய அவர்,

மயிலாப்பூரில் எனக்கு அபரிமித ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

மயிலாப்பூரில் சொன்னபடி மக்களுக்கு வீடுகளை கட்டித்தரவில்லை.

முதலமைச்சர் பிரசாரத்தில் மக்கள் பிரச்சனை, திட்டங்கள், குறித்து பேசாமல் மேம்போக்காக பேசி வருகிறார்.

தொகுதி மறுவரையறை குறித்து ஏற்கனவே மோடி , அமித்ஷா விளக்கம்

அளித்து விட்டார்.

ஆனால் தென்பகுதி வஞ்சிக்கப்படும் என்பதை போன்ற தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்துகிறார் .

புதிதாக

செல்வப்பெருந்தகையும் அதில் இணைந்துள்ளார்.

பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த மசோதாவுக்கு இப்போது என்ன அவசரம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

முதலமைச்சர் என்றால் உழைத்து தான் ஆக வேண்டும் எல்லா முதல்வரும் உழைத்து கொண்டுதான் உள்ளனர்.

உதயநிதி அர்த்தமே இல்லாமல் பேசுகிறார்.

இன்றும் பெண்களை உருவக் கேலி செய்கின்றனர்.

8 ஆயிரம் ரூ. டோக்கன் மாதிரி கொடுத்து வாக்கு கேட்பது மன்னிக்க முடியாத குற்றம், ஓபிஎஸ் - சே அதை கொடுத்து கொண்டிருப்பதை பார்த்தோம்

நெல்லுக்கான ஊக்கத்தொகை குறித்த நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பதிலளித்த தமிழிசை,

மத்திய நிதி அமைச்சருக்கு உரிய மரியாதையை முதலமைச்சர் , துணை முதலமைச்சர் கொடுக்க வேண்டும்.

நெல்லை விட அதிக லாபம் தரும் முதலீடுகளை செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

அதை திரித்து முதலமைச்சர் கூறுகிறார்.

கம்யூ. கள் முதலமைச்சர் என்ன கூறினாலும் தலை ஆட்டுகின்றனர் , எதையும் படிப்பதில்லை என்று அவர் பேசினார்.

நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது பற்றி நிர்மலா சீதாராமன் மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

நெல்லை உற்பத்தி செய்யும் பொழுது விவசாயிகளுக்கான பண முதலீடு அவர்களுக்கான வியாபாரம் லாபமும் கிடைப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு இன்னும் அதிக லாபம் பெற்று இன்னும் அதிக முதலீடு செய்து அதன் மூலம் செல்வந்தர்களாக ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதுதான் சொல்லியிருக்கிறார்கள்.

நெல் உற்பத்தியில் இருந்து, நவீன விவசாயத்திற்கு வாருங்கள் அதன் மூலம் அதிக பல நடைவீர்கள் என்று சொன்னதை,முதலமைச்சர் அப்படியே திருச்சி இருக்கிறார்.

முதல்வர் சொன்னால் உடனே சண்முகம் போன்றவர்கள் அதனை படிக்கக்கூட மாட்டார்கள் உடனே தலையாட்டி விடுவார்கள்.

எந்த விதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள், விவசாயிகளுக்காக எவ்வளவு குரல் கொடுக்கின்ற முதலமைச்சர் டெல்டா விவசாயிகளிடம் கேட்டு பாருங்கள்.

ஒரு மூட்டையைக் கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து கமிஷன் பெறுகிறார்கள்.

செந்தில் பாலாஜி பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் ஒரு நெல் மூட்டையை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் கமிஷன் பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாட்டிலுக்கு 10 ரூ , மூட்டைக்கு 40 ரூ அதிகாரிகள் அமைச்சர்கள் கமிசன் வாங்குகின்றனர்

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் போன்றவற்றை தமிழ்நாட்டில் தடுத்துவிட்டனர்.

நாளை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

மாவட்டம் தோறும் 400 முதல் 500 பரிந்துரைகள் பெற்றொம்

அனைத்தையும் சேர்த்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.

நாளை 11 மணிக்கு ஐடிசி விடுதியில் ஜெ.பி. நட்டா , பியூஷ் கோயல் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார் என பேசினார்.

திருமாவளவன் குறித்த கேள்விக்கு,

திருமாவளவன் குழம்பி போய் உள்ளார்,பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி உள்ளார் , தமிழ்நாட்டில் ஒரு மாதிரி உள்ளார்.

துணை முதலமைச்சர் பதவி கேட்டிடுவாரோ என்ற அழுத்தத்தில் திமுக அவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று அவர் பதிலளித்தார்

Hindusthan Samachar / P YUVARAJ