Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்செந்தூர் முருகன் கோவிலின் முன்னாள் தக்காராக பணியாற்றியவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை வடபழனியில் வசித்து வரும் அருள் முருகன் என்பவரது இல்லத்தில் காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரது இல்லம் மற்றும் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருள் முருகன் துறைமுகம் சார்ந்த ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் என்றும், முன்பு திருச்செந்தூர் முருகன் கோவில் தக்காராக பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.
சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை பரிசோதனை செய்யப்படுகின்றன.
மேலும், இந்த நடவடிக்கை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக துணை ராணுவத்தினரின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ