Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 13 ஏப்ரல் (ஹி.ச.)
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் MKD கார்த்திக் தண்டபாணி அவர்களை ஆதரித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசுகையில் செங்கல்பட்டு மண்ணில் தாமரை ஒருபோதும் மலராது, அது கோவிலில் மட்டுமே மலரும் என்று சாடினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்த அவர் நாங்கள் திமுகவோடு கூட்டணி வைத்ததற்கு என்னால் 3 மணி நேரம் விளக்கம் அளிக்க முடியும்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தையாவது விளக்க முடியுமா? 21-ம் தேதி பிரச்சாரம் முடியும் வரை அவருக்கு அவகாசம் தருகிறேன்.
ஏதேனும் ஒரு இடத்தில் இதற்கான விளக்கத்தை அவர் சொல்லட்டும் எனத் தெரிவித்தார ஊடகங்கள் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுவதாகக் கூறுவதை மறுத்த அவர் தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி மற்றும் அதிமுக தலைமையிலான அணி என இரண்டு அணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது மற்றவர்கள் எல்லாம் போட்டியில் இல்லை என்று குறிப்பிட்டார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அது வெறும் மீடியா ஹைப் என்று விமர்சித்தார். விஜய் போனால் லட்சக்கணக்கான மக்கள் திரள்வது திட்டமிட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது.
சினிமாவில் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். 35 வருடங்களாக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் நாங்களே நடைமுறை எதார்த்தம் உணர்ந்து பேசுகிறோம்.
ஆனால் எவ்வித மக்கள் தொண்டும் செய்யாமல் சினிமாவிலிருந்து வந்தவர்கள் முதலமைச்சர் ஆசைப்படுவது தமிழகத்தின் சாபக்கேடு என்று கடுமையாகச் சாடினார்.
மேலும் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை பட்டியலிட்டு விளக்கி கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam