Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 13 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்றைய தினம் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டவர் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சார உரையாற்றி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
திமுக கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் ஆணையை ஏற்று, இன்று விழுப்புரம் தொகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன.
இந்தத் தொகுதி எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் மீதும், தளபதி அவர்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.
பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என ஒவ்வொரு இல்லத்திலும் ஏதோ ஒரு பயனை இந்த அரசு சேர்த்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் நம் அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் நலன் காக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எதிரணி என்ன செய்கிறார்கள்? அவர்கள் வெறும் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால், நாம் சொன்னதைச் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்துகொண்டிருக்கிறோம். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சியைத் தொடரவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் மீண்டும் ஒருமுறை உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உடன் வானூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கௌதம் அவர்களுக்கும் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார் நிகழ்ச்சிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam