Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்
அம்பேத்கரின் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மாலை
அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் ராணி அம்பேத்கர்
சிலைக்கு மாலை அணிவிக்க வரும் நேரத்தில் அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியை
சேர்ந்த நபர்கள்
கூட்டணி கட்சியில் இருக்கும் பாஜகவில் இருந்து சிலர் மாலை அணிவிக்க
வரக்கூடாது,
என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்வளவு நாள் மாலை அணிவிக்க வராதவர்கள் தற்போது அரசியல் செய்திட தேர்தல்
நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக மாலை அணிவிக்க வருவது ஏன் என கேள்வி எழுப்பி
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் அதிமுக வேட்பாளர் ராணி மாலை அணிவிக்க வந்தபோது
வேறு நபர்கள் யாரும் வரக்கூடாது என்று மீண்டும் கூறியதையொட்டி, மீண்டும் கடும்
வாக்குவாதம் ஏற்பட்டு
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நபர்களுக்கும் அதிமுகவினருக்கும்,
தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியது.
பின்னர் போலீசார் இரு தரப்பையும், சமாதானம் செய்து அதிமுக வேட்பாளர் கூட்டணி
கட்சியினரான பாமக, அமமுக, புரட்சி பாரதம், ஆகியோருடன் சென்று மாலை அணிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam