Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 14 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய அரசியலமைப்பின் தந்தை, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135வது ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்டை சமூக கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்த அம்பேத்கர் அனைவருக்கும் முன்மாதிரி.
உலகின் வலுவான ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதற்கு அவர் உருவாக்கிய அரசியலமைப்பே காரணம்.
அவரது இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஐ.டி. மற்றும் கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் தனது பதிவில்,
பின்தங்கிய மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர் அம்பேத்கர்.
இந்திய அரசியலமைப்பின் மூலம் அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கிய பெருமை அவருக்கே சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கர் ஜெயந்தி நாளில், அவர் நாட்டிற்கு செய்த சேவைகளை நினைவுகூர வேண்டும் என்றும் இருவரும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA