Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
கல்வி, சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதே அம்பேத்கர் அவர்களின் கனவு என்றும், மக்கள் வாழ்வில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதே அவருக்கான சிறந்த அஞ்சலி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ