Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
செங்கல்பட்டு அருகே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி ட்ரெக்கிங் சென்ற கல்லூரி மாணவர்கள் 6
மாணவர்கள்,அங்கு கிடந்த இரும்புப் பொருளை எமன்சு யாதவ் (21) என்ற மாணவர் காலால் உதைத்தபோது, அது கல்லில் மோதி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வெடிப்பில் அவர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் இரு மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரின் பயிற்சி மையம் உள்ள பகுதி என்பதால், அங்கு வெடிபொருள் எச்சங்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அனுமதியின்றி அந்த பகுதிக்கு சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ