சென்னை துறைமுகம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வைரல்
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) நாம் தமிழர் கட்சியின் துறைமுகம் தொகுதி வேட்பாளரான இரா. ஃபௌசன் செரிப், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மண்ணடி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, பல தெருக்களில் 4 முதல் 5 பெண்கள் கொண்ட திமுகவைச
மோதல்


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சியின் துறைமுகம் தொகுதி வேட்பாளரான இரா. ஃபௌசன் செரிப், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மண்ணடி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, பல தெருக்களில் 4 முதல் 5 பெண்கள் கொண்ட திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பட்டியல்களை கொண்டு வீடு வீடாகச் சென்று, அந்தந்த வீட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் நடைபெறுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்தவர்கள், வேட்பாளருடன் கடுமையான வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும், தகராறு சண்டையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒரு தேநீர் கடை அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam