Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை அயனாவரம்
அயனாவரம் பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா (30) செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் புருஷோத்தமன் (34). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 4 வயது மகள் உள்ளார்.
புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல், தினமும் மதுபானம் அருந்தி வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி சத்யாவின் இடது கையில் குத்தியுள்ளார்.
காயமடைந்த சத்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam