Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன் என்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிந்தனையை முன்னிறுத்தி, அவரது பிறந்தநாளில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு, அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை காக்கவும் அனைவரும் உறுதியேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவின் உண்மையான வலிமை அதன் பன்மைத்துவத்தில் இருக்கிறது என்றும், திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னேற்றமே ஒரு சமூகத்தின் அளவுகோல் எனில், ஏற்றத்தாழ்வுகளையும் ஒற்றைத்தன்மையையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் கனவான சமத்துவமும் சமூகநீதியும் நிலைநிறுத்தப்படும் வரை இந்தப் பாதையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ