மக்களின் வீட்டிற்கு சென்று திட்ட பயன்களை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலூர், 14 ஏப்ரல் (ஹி.ச) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு நலத்திட்டங்களின் பயன்களை நேரில் அறிய பொதுமக்களின் வீட்டிற்கு சென்று கலந்துரையாடினார். கே.வி. குப்பம் தொகுதியில் காலை பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்
முதலமைச்சர்


வேலூர், 14 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு நலத்திட்டங்களின் பயன்களை நேரில் அறிய பொதுமக்களின் வீட்டிற்கு சென்று கலந்துரையாடினார்.

கே.வி. குப்பம் தொகுதியில் காலை பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு சென்றார்.

கனவு இல்லம் திட்டத்தின் பயனாளியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர், குடும்பத்தினருடன் உரையாடி அவர்களின் நிலையை கேட்டறிந்தார்.

அதேபோல், ஒரு இல்லத்தரசியிடம் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பனில் என்ன பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என கேட்டார்.

அப்போது, அந்த இல்லத்தரசி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 பெறுவதாகவும் தெரிவித்தார்.

அவரது குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருவதாக கூறியதுடன், அதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மூலம் அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றன என்பதை முதலமைச்சர் நேரில் அறிந்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam