Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 14 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளன.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்த கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கேற்ப, புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது பாடப்புத்தகங்களின் அச்சிடும் மற்றும் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், வரும் 15-ம் தேதிக்குள் அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வெளியிடப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.
புதிய பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், செயல்முறை அறிவு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் புதிய கல்விக் கொள்கையின் பலன்களை சிறப்பாக பெறுவார்கள் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA