துணை ஜனாதிபதி இல்லத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி , 14 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் இ
D


புதுடெல்லி , 14 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி

சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி இல்லத்தில் உள்ள பூஜை அறையில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

பின்னர், சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு முருகப்பெருமான் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேசிய தலைவர்கள் பரஸ்பரம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA