மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும் - நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து
புதுடெல்லி , 14 ஏப்ரல் (ஹி.ச.) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து, பராபவ ஆண்டு பிறந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் புத
D


புதுடெல்லி , 14 ஏப்ரல் (ஹி.ச.)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து, பராபவ ஆண்டு பிறந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர்.

கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழ் புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA