Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 136வது பிறந்த நாள் இன்று (14.04.2026) நாடு முழுவதும் வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் அம்பேத்கரின் பிறந்தநாள் வருடந்தோறும் சமத்துவ நாளாகத் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b