எம்பி கனிமொழி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தூத்துக்குடி, 14 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கா
Election Flying Squad Conducts Search of MP Kanimozhi's Car


தூத்துக்குடி, 14 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தை முடித்துவிட்டு கனிமொழி எம்பி தனது காரில் தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்டார்.

அவருடன் காரில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.

கார் விளாத்திகுளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்குச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை மறித்து நிறுத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள் காரின் பின்புறப் பெட்டியை (டிக்கி) திறந்து சோதனையிட்டனர்.

மேலும், வாகனத்திற்குரிய ஆவணங்களையும் வாங்கிச் சரிபார்த்தனர்.

சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்காததைத் தொடர்ந்து, அதிகாரிகள் காரைச் செல்ல அனுமதித்தனர்.

Hindusthan Samachar / vidya.b