தமிழ்ப்புத்தாண்டில் ஷாக் -கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந
தங்கம்


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழ்புத்தாண்டு தினமான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,220க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,865க்கும் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P