தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு பிறந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக
தமிழக ஆளுநர்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு பிறந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியை பயன்படுத்தும் நாம், சூரியன் மேஷராசியில் நுழையும் நிகழ்வை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் தமிழ் வருடப் பிறப்பு, கேரளத்தில் விஷூ, அசாமில் பிஹூ, பஞ்சாபில் பைசாகி என பல்வேறு பெயர்களில் இந்நிகழ்வானது நாடெங்கிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பருவங்கள் மாறுவது போல் நாம் நம்மை அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொண்டு சுமுகமான, நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b