Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 14 ஏப்ரல் (ஹி.ச.)
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
அணியின் கேப்டன் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தி 44 பந்துகளில் 91 ரன்கள்
(8 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார்.
அவருக்கு துணையாக ஹென்ரிட்ச் கிளாசன் 26 பந்துகளில் 40 ரன்கள்
(4 சிக்சர்) சேர்த்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 217 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி ரன் சேர்க்க முடியாமல் பின்னடைவு கண்டது.
அணியின் சார்பில் ஃபெரரியா மட்டும் 69 ரன்கள் குவித்து போராடினார்.
ஆனால் மற்ற வீரர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்காததால், அணி தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA