ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால் ரூ.500 தள்ளுபடி - கொல்கத்தா இதய நிபுணர் அறிவிப்பால் சர்ச்சை
கொல்கத்தா 14 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, ஜெய் ஸ்ரீ ராம் க்யூஆர் குறியீடு இணைக்கப்பட்டுள்ளதுடன், அந்த கோஷத்தை கூறும் ந
K


கொல்கத்தா 14 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம்

கொல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பி.கே. ஹஸ்ரா,

ஜெய் ஸ்ரீ ராம் க்யூஆர் குறியீடு இணைக்கப்பட்டுள்ளதுடன்,

அந்த கோஷத்தை கூறும் நோயாளிகளுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் பா.ஜ.க. கட்சி கொடியும், கட்சியை சுட்டிக்காட்டும் வகையில் தொப்பியுடன் மருத்துவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மருத்துவ சேவையில் மத மற்றும் அரசியல் கோஷங்களை இணைப்பது சர்ச்சைக்குரியது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே சமயம், சிலர் இது மருத்துவரின் தனிப்பட்ட முடிவு என்றும், சலுகையை பயன்படுத்துவது நோயாளிகளின் விருப்பம் என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA