கும்பகோணம் 17வது வார்டு தமிழக வெற்றி கழகத்தினரை பிரச்சாரம் செய்ய கூடாது என  திமுகவினர் வாக்குவாதம்
தஞ்சாவூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) கும்பகோணம் 17வது வார்டிற்கு உட்பட்ட துக்கம்பாளையத்தெரு தெரு தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி பெற்று இன்று அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னதாக சென்ற திமுகவினர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து தவேகவினருக்க
போராட்டம்


தஞ்சாவூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

கும்பகோணம் 17வது வார்டிற்கு உட்பட்ட துக்கம்பாளையத்தெரு தெரு தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி பெற்று இன்று அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னதாக சென்ற திமுகவினர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து தவேகவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்ய இடையூறு செய்து திமுகவினர் வாக்குவாதம் செய்ததால், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் தவெக தாக்குதலுக்கு ஆளாகி காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதனை தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை திமுகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் தங்கள் நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகவும் கூறியும், தவெக நிர்வாகிகளை தாக்கிய திமுக மாநகர செயலாளர் துணை மேயர் தமிழழகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத் தலைமையிலான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு பதட்டமும் அந்த பகுதியில் ஏற்பட்டது.

அதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால் அங்கிருந்து அனைவரும் கலந்து சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam