Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 14 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி மதுரை திருநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை இயற்றியவர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், ஏழை எளிய மக்களால் போற்றப்படும் தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர். அவருடைய வழிகாட்டுதலில் உருவான அரசியலமைப்பை, மோடி அரசு தொடர்ந்து அவமதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் திடீரென செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை (Delimitation) சட்டம் கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள 545 தொகுதிகளுடன் கூடுதலாக 272 புதிய தொகுதிகளை உருவாக்கி, மொத்த எண்ணிக்கையை 812 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடமோ அல்லது மாநில முதலமைச்சர்களிடமோ எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
அமித்ஷாவும்,மோடியும் தொடர்ந்து அரசியல் சாசனத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மிக இழிவாக நடத்தி எதிர்க்கட்சிகளின் குரல்களை நெறிப்பதற்காக பலமுறை முயன்றார்கள்.
ஆனாலும் மக்களுடைய ஆதரவு இருந்ததன் விளைவாக 140 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரிலிருந்து இப்பொழுது 240 நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறோம். 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கை இல்லாததன் விளைவாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இப்படி இவர்களுடைய இந்த ஆணவப் போக்கினால் தொடர்ந்து அரசியல் சாசனம் அவமானப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற ஜனநாயகமும் அவமானப்படுத்தப்படுகிறது.
அதன் வாயிலாக மக்கள் அவமானப்படுத்தப்படுவது ஆர்.எஸ்.எஸ்.-னுடைய கொள்கையாக இருக்கிறது. குறிப்பாக இந்த டீ-லிமிடேஷன், அதாவது பெண்களுக்கான 33 சதவீதத்தை கொண்டு வருவதற்காக செய்திகள் பரப்பப்படுகின்றன.
சோனியா காந்தி நேற்று மிக தெளிவான ஒரு அறிக்கையையும், ஒரு ஆர்ட்டிகிளையும் 'தி ஹிந்து' நாளிதழில் எழுதியிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டிலே 2023-ல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் மசோதாவிற்கு முழு ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியினுடைய கனவுகளில் ஒன்று பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு. அது சட்டமாக நிற்கிறது. அந்த சட்டமாக இருப்பதை எந்த விதத்திலும் மாற்றக் கூடாது.
அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும், தொகுதி மறுவரையறையையும் சேர்ப்பது என்பது எந்த ஒரு விவாதமும் இல்லாமல் சேர்ப்பது என்பது ஏற்க முடியாது என்றார்
தமிழகத்தில் ராகுல் காந்தி எப்பொழுது தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார்? முதலமைச்சருடன் இணைந்து பிரச்சாரம் செய்கிறாரா? என்ற கேள்விக்கு:
ராகுல் காந்தி அவசியம் வருகிறார்.
எல்லாருக்கும் தெரியும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் ராகுல் காந்தி வொர்க்கிங் கமிட்டி காங்கிரஸினுடைய காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
அதற்குப் பின்னாலே 12-ம் தேதி அம்பேத்கருடைய பிறந்தநாளை முன்னிட்டு
'ரன் ஃபார் அம்பேத்கர்' என்று ஒரு மிகப்பெரிய ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது டெல்லியில்.
அலிப்பூர் ரோட்டில் எங்கு அம்பேத்கர் தங்கியிருந்தாரோ, அந்த வீடு வரையிலான ஒரு ஓட்டம். அதற்காக ஒரு நாளும், இன்று ராகுல் காந்தி அவர்கள் பெங்காலியில் மூன்று பிரச்சாரக் கூட்டங்களில் பங்கெடுக்கிறார்.
நாளை எதிர்க்கட்சித் தலைவருடைய கூட்டம். நாளை மறுநாள் மூன்று நாள் நாடாளுமன்றம் நடக்குது. ரொம்ப முக்கியமான நாடாளுமன்றக் கூட்டம்.
அதனால ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் கடைசி நான்கு நாட்கள் பிரச்சாரம் இருக்கிறது.
அந்த நான்கு நாட்களில் அவசியம் ராகுல் காந்தி வருவார் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ராகுல் காந்தி மட்டுமல்ல,பிரியங்கா காந்தி அவர்களும் பிரச்சாரத்திற்கு வர இருக்கிறார் தமிழ்நாட்டிற்கு.
முதலமைச்சரும் ராகுல் காந்தியும் இணைந்து பிரச்சாரம் செய்கிறார்களா என்ற கேள்விக்கு: அது இரண்டு கட்சிகளுடைய தலைவர்களும் சேர்ந்து பேசி, மாநிலத் தலைவர் பேசி, முதலமைச்சருடைய பயணத்தோடு சேர்ந்து இந்தப் பயணத்தை எப்படி வைக்கிறதுங்கறதப் பார்த்து முடிவு செய்வார்.
ஏனென்றால் முதலமைச்சருடைய பயணத் திட்டம் போட்டிருக்கலாம். அதோடு சேர்த்து இதை எப்படி என பார்த்து முடிவு செய்வார்கள்.
ஆனால் ராகுல் காந்தி மதச்சார்பற்ற கூட்டணி பிரச்சாரத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு நாள் பிரச்சாரம் செய்வார் என்பது என்னுடைய நம்பிக்கை என்றார்.
தொடர்ந்து புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பெயரை சொல்லவில்லை ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் போது ராகுல் காந்தி பெயரை சொல்லவில்லை இது அவர்களுக்குள்ளே இணக்கமில்லாததை காண்பிக்கிறது என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு:
சீட் கிடைக்காத அண்ணாமலை பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்களா? சீட் கிடைக்காத அண்ணாமலையைப் பத்தி எல்லாம் இதுல சீரியஸா எடுக்க வேண்டியது இல்ல. அவர் கட்சியில பாவம் அல்வா குடுத்துட்டாங்க.
அவருக்கு சீட்டும் கொடுக்கல, இப்ப பிரச்சாரம் பண்றேன்னு சொல்லி பிரச்சார பீரங்கியா அலைய விட்டிருக்காங்க. ஊரு ஊருக்கு போய் அவர் விஜய்க்கு ஓட்டு போட வைச்சுக்கிட்டு இருக்காரு.நேற்று ஈரோடுக்கு போய் 18 வயசுல இருந்து 23 வயசுக்காரர் வரைக்கும், 21-ல இருந்து 29 வயசுக்காரர் மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் பேர் இருக்கீங்க, நீங்க எல்லாரும் ஏதாச்சும் ஒரு சின்னத்துக்கு ஓட்டு போட்டுறக் கூடாதுன்னு சொல்லி அவர் இன்னொரு சின்னத்துக்கு ஓட்டுக் கேட்கிறத நம்ம பார்க்க முடிஞ்சுது.
உள்ளடி வேலை பார்க்குறதும், உள்ளிருந்தே உள்குத்து குத்துறதும் அண்ணாமலைக்கு கைவந்த கலை.
அவரைப் பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக விடக்கூடாது என்பதற்காக அவர வாலண்டியரா விட்டுருக்காங்க.
அவரை விட்டதன் விளைவா அவரு சர்வநாசம் பண்றதுக்காக அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ரோட்டுல நிப்பாட்டுறதுக்காக அந்த கான்ட்ராக்ட் எடுத்து அந்த கான்ட்ராக்ட்ல வேலை பார்த்துகிட்டு இருக்காரு அண்ணன் அண்ணாமலை. அவரைப் பத்தி இதுல இழுக்காதீங்க பாவம்.
பல கோடி கொடுத்து காங்கிரஸை திமுக பாக்கெட்டில் போட்டுள்ளது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:
முந்தாநாள் கூட நம்ம ஆளு ஒருத்தன் புதுசா காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அந்த காங்கிரஸ் எல்லாம் உங்க காங்கிரஸ்னு நினைச்சா நம்ம என்ன பதில் சொல்றது.
சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி இடத்தில் தான் உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளது.
தொடர்ந்து கடந்த முறை உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ஆதரித்து வாக்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு:
இரண்டு முறை பிரச்சாரத்திற்கு போயாச்சு
எங்களைப் பொறுத்தமட்டில் மதசார்பற்ற செயல்வீரர்கள் கூட்டத்திலும் பேசிவிட்டேன்.
அவரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விஜய பிரபாகரனுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவோடு அழகர்சாமி நாயுடு பேரனாக காங்கிரஸ் கட்சி பார்க்கிறது மதுரையில் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினராக இருந்தவர்.
காமராஜர் பிறந்த மண்ணில் அவர் நிற்கிறார் அவரது வெற்றிக்காக 100% முழு மனதோடு பணியாற்றுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக விஜய பிரபாகரன் வழக்கு தொடர்ந்தது என்ன ஆச்சு என்ற கேள்விக்கு:
வழக்கைப் பார்த்துக் கொள்வோம் இருவரும் வழக்கு போட்டுக் கொள்வோம் இது தேர்தல்
கூட்டணி தர்மத்திற்கு நாங்க எப்பவுமே பாஜகா மாதிரி உள்ளடி வேலை பார்க்காதவங்க.
நாங்க உண்மையா 100 சதவீதம் காங்கிரஸ் கட்சி எங்களுடைய வேலையை கூட்டணிக் கட்சிக்காக பண்ணுவோம்.
அண்ணாமலை எப்படி வந்து கான்ட்ராக்ட் வாங்கிட்டு பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கக் கூடாதுங்கிறதுக்காக பணியாற்றி இருக்காரோ அப்படி எல்லாம் நாங்க பண்ண மாட்டோம்.
எங்களைப் பொறுத்தமட்டில் முழுமையாக, முழு மனதோடு அனைவரும் வெற்றி பெற வேண்டும், எங்களுடைய கூட்டணியின் ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு இருக்கும்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பாஜக தலைவர்கள் பேசி வருவது குறித்த கேள்விக்கு:
மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிப்பாளர் சித்திக் அறிக்கை தான் அரசாங்கத்தினுடைய அறிக்கை.
மத்த எல்லாரும் அண்ணாமலை எந்த பேப்பரை காட்டிகிட்டு இருக்காருன்னு தெரியாது.
ஒரு பேப்பரை காட்டி பேசுவாப்ல அந்த பேப்பர் வெறும் பேப்பராக கூட இருக்கலாம்.
நானும் ஒரு பேப்பர் எடுத்து காட்டுனேன்னா அந்த பேப்பர் எப்படி இருக்குமோ அது மாதிரிதான்.
அதெல்லாம் அல்வா கொடுக்கிற கதை, அல்வாவுக்குப் பெயர் போன அண்ணாமலை அதனால இங்க மதுரை மெட்ரோ வருவதற்கு பாஜக அரசு தடை போடுது. அதை எதிர்த்து எங்களுடைய போராட்டம் தொடரும்.
மதுரைத் தெற்கில் பாஜக வெற்றி பெறாது தமிழக மக்களைப் பொறுத்தமட்டில் பாஜகவை வேரூன்ற விடமாட்டாங்க மதுரையில. மதுரை தெற்கில் சீனிவாசன் தோற்கடிக்கப்படுவார்.
அவருடைய தோல்வி என்பது மிக மிக முக்கியமானது மதுரையுடைய அமைதியைக் காப்பதற்கு. அப்படி இருக்கும் பொழுது அதே போல மதுரைக்கு மெட்ரோ கொண்டு வருவதற்காக தொடர்ந்து நாங்கள் நாடாளுமன்றத்திலே போராடுவோம், வாதாடுவோம்.
எப்படி மதுரை எய்ம்ஸ்க்கு என்னென்னவெல்லாம் வசனம் பேசுனாங்களோ, அதெல்லாம் போட்டு இப்ப மதுரை எய்ம்ஸ் கட்டிக்கிட்டு இருக்காங்க.
அதனால என்னன்னா இல்லாத எய்ம்ஸ வந்து 85 சதவீதம் முடிஞ்சுருச்சுன்னு நட்டா சொல்லும்போது நாங்க என்ன பண்ணுமோ அது மாதிரி தொடர்ந்து போராடுவோம். போராடி மெட்ரோவைக் கொண்டு வருவோம் என்பது மட்டும் மிகத் தெளிவு.
மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வீர வசனம் பேசிய மாணிக்கம் தாகூர் அதை பெற முடியாத நிலையில் தன்னை பற்றி குறை கூற தகுதி இல்லை என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு:
மதுரை வடக்கு பற்றித் தம்பி கேட்டான்.
மதுரை வடக்கு கேட்டோம். கூட்டணியில் யார் பேசுனாங்களோ அவங்ககிட்ட கேக்கச் சொல்லுங்க. திமுகவோட ஏழு தலைவர்கள் உறுப்பினர்கள் இருந்தாங்க, ஏழு பேருக்குத் தெரியும் காங்கிரஸ் கட்சி வடக்கு எவ்வளவு வேகமா கேட்டுச்சுன்னு. வடக்கு கேட்டதற்காக இரண்டு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மதுரை மாவட்டத்தில குடுத்துருக்காங்க
உசிலம்பட்டியும் மேலூரும் வந்துருக்கு.
அண்ணாமலையைப் பொறுத்தமட்டில் பழனிசாமியை என்னென்னெல்லாம் பேசுனார். பழனிசாமி வந்து 'தக்குறி'ன்னு சொன்னாரு அதுக்காகத்தான் அண்ணாமலை இந்த வேலை பார்க்குறாரா? ஒரு முதலமைச்சரை தக்குறின்னு சொன்ன அண்ணாமலை தற்குறிங்கற வார்த்தையோட மட்டும் இல்லாம அவரை உண்மையாவே தரையில நிப்பாட்டுறதுக்காகவும் ரோட்டுல நிப்பாட்டுறதுக்காகவும் பணியாற்றிட்டு இருக்காரா? இந்த கூட்டணியைத் தோற்கடிக்கணும், எந்தக் கூட்டணியில் இருக்காரோ அந்தக் கூட்டணியைத் தோற்கடிக்கணும்னு பணியாற்றுற அண்ணாமலை எங்க? எங்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் சரி இந்த கூட்டணியை ஜெயிக்க வைப்போம் அப்படிங்கிறது எங்களுடைய எண்ணம். அதனால அண்ணாமலையைப் பொறுத்தமட்டில் தனக்கு சீட்டும் கொடுக்கல அவரை கூட்டணிக் கட்சியும் மதிக்கல. அதனால அண்ணாமலையைப் பொறுத்தமட்டில இதெல்லாம் பேசுறது என்பது பொருத்தமா இருக்காது.
அண்ணாமலையைப் பொறுத்தமட்டில் அவருடைய சாயம் வெளுத்துப் போச்சு. அண்ணாமலையைப் பொறுத்தமட்டில் அண்ணன் செல்லூர் ராஜு போன்றவர்கள் தான் அவரை வந்து தவறான ஒரு பிம்பமா இது பண்றாங்க. அண்ணாமலையை தேவரோடு ஒப்பிடுவது செல்லூர் ராஜு. அதாவது ஒரு தெய்வமகனாக இருந்த திருமணம் செய்து கொள்ளாமல் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்த தைரியமாக குரல் கொடுத்த தேவர் எங்க? இங்க பார்த்தீங்கன்னா இது ரியல் எஸ்டேட் பார்த்துகிட்டு இருக்கிற அண்ணாமலை எங்க? மதுரை மேற்கு மக்கள் அவசியம் செல்லூர் ராஜுக்கு இதற்குப் பதிலடி கொடுப்பார்கள். நம்ம தெய்வமாகப் போற்றப்படும் தேவரை அண்ணாமலையோடு ஒப்பிட்டது மிகப்பெரிய தப்பு. அதற்குச் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அதிகார பகிர்வு குறித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு:
அஞ்சாம் தேதி தேர்தல் ரிசல்ட் வந்தவுடனே பேசுவோம் என்றார்
Hindusthan Samachar / Durai.J