Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு லால்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், பல பகுதிகளில் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில், அதிக சோர்வு மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உடல் சோர்வு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், நிலைமை தற்போது நிலையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்கள் ஓய்வு அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட இடைவேளையால், லால்குடி தொகுதியில் அவரது அடுத்த கட்ட பிரசார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவரது உடல்நிலை விரைவில் சீராகி மீண்டும் பொதுமக்கள் மத்தியில் தோன்றுவார் என அவரது நெருங்கியவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ