Enter your Email Address to subscribe to our newsletters

ஹர்தோய், 14 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இயங்கி வந்த ‘சிட்டி மோட்டார் வொர்க்ஷாப்’ என்ற ஆட்டோ கேரேஜில் நேற்று இரவு சுமார் 10:45 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர், 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு அதிகாரி மகேஷ் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இரவு 10:45 மணியளவில் ‘சிட்டி மோட்டார் வொர்க்ஷாப்’பில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக ஹர்தோய் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தை அனுப்பினோம். சம்பவ இடத்திற்குச் சென்றபோது தீ மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தோம்.
வொர்க்ஷாப்பிற்குள் CNG-யில் இயங்கும் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், வொர்க்ஷாப்பில் இருந்த உபகரணங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தினோம்.
தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டது. தீ விபத்துக்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். என்றார்.
இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வொர்க்ஷாப்பில் இருந்த CNG வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு, எரிபொருள் கசிவு உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b