Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 14 ஏப்ரல் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)-இங்கு அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டு சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள சில அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், சிலரை மதமாற்றம் செய்ய அழுத்தம் தந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்த இந்த சம்பவங்கள் தற்போது வெளியானதால், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA