திமுகவிற்கு தான் தமிழகம் அவுட் ஆப் கண்ட்ரோல் - நயினார் நாகேந்திரன்
நெல்லை, 14 ஏப்ரல் (ஹி.ச.) டாக்டர் அம்பேத்கார் அவர்களது 135 வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை சந்திப்பு மதுரையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நையினார் நகேந்திரன், பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், திருநெல்வேலி சட்
நயினார் நாகேந்திரன்


நெல்லை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

டாக்டர் அம்பேத்கார் அவர்களது 135 வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை

சந்திப்பு மதுரையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில

தலைவர் நையினார் நகேந்திரன், பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், திருநெல்வேலி

சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி

அதிமுக வேட்பாளர் சம்சு சுல்தான் மற்றும் அதிமுக பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை

செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார்

நாகேந்திரன்,

பாஜக, தேசத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைத்து மக்களுக்காக

பாடுபட்ட தலைவர்களை நேசிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தேசத்திற்காக பாடுபட்டவர்களை பாராட்டி

வருகிறார்.

தேசத்திற்காக உழைத்த தலைவர்களை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும்

புகழ்ந்து கௌரவித்து வந்தார். பிரதமர் இப்போது மட்டும்தான் தமிழகம் வருவதாக

உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது

புரியாமல் இருக்கலாம்;

உதயநிதி ஸ்டாலின் சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டு

வருவதால் ஒன்றும் தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்து 14

லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தேர்தல் தேதி

தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 11 தடவைக்கு மேல்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார்.பிரதமர் மலேசியா சென்றாலும்

தமிழைப் பற்றியே பேசுகிறார்.

ஐ.நா. சபையிலும் தமிழைப் பற்றியே பேசுகிறார்.

தமிழின் பெருமையை அவர் நிலைநாட்டி வருகிறார்.திருக்குறளை பல மொழிகளில்

மொழிபெயர்க்க நரேந்திர மோடி முயற்சி எடுத்து செயல்படுத்தி வருகிறார் .

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு

தற்போது வாழ்வா சாவா பிரச்சனை நிலவி வருகிறது. யாரைப் பற்றி பேசினால் தாக்கம்

இருக்கும் என நினைத்து பிரதமரை பற்றி பேசி வருகிறார்கள்.

ஆனால் அது எடுபடாது.

தமிழகம் வடக்கிற்கு அவுட் ஆப் கண்ட்ரோல் அல்ல. ஆனால் தமிழகத்தில் தான் சட்டம்-ஒழுங்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாகி விட்டது. திமுகவிற்கு தமிழகம் அவுட்

ஆப் கண்ட் ரோல் ஆகிவிட்டது. திமுகவை மக்கள் ஒதுக்கி வைக்கப் போகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார்.நாகர்கோவில் வேப்பமூடு

சந்திப்பில் காமராஜர் சிலையிலிருந்து தொடங்கும் ரோட் ஷோ, மணிமேடை சந்திப்பு,

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை வழியாக, டாக்டர் அம்பேத்கர் சிலை வழியாக, வடசேரி எம்.ஜி.ஆர் சிலை முன்பு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

தமிழக

மக்களுக்கு ரோட் ஷோ மூலம் பல்வேறு தகவல்களை வழங்க உள்ளார்.“சீனி” என்று

எழுதிக்கொண்டு நக்கினால் இனிக்காது. மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்

என்பதை உணர்ந்து வாக்கு அரசியலில் பங்கேற்பார்கள்.

இதுவரை தொடர்ந்து திமுக

ஆட்சிக்கு மறுமுறை வாய்ப்பு கிடைத்ததில்லை; இந்த முறையும் திமுக மறுமுறை

ஆட்சிக்கு வராது.விஜய் அல்ல, யார் வந்தாலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணியின்

தலைவர்கள் அனைவரும் இணைந்த அமைத்துள்ள மக்கள் கூட்டணியை மக்கள் ஆதரித்து

வெற்றி பெற செய்வார்கள்.தமிழகத்தில் இரண்டு வயது குழந்தை முதல் 70 வயது

பெண்கள் வரை வேறுபாடு இன்றி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று

வருகின்றன.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் முதல் செயற்கை (சிந்தடிக்) போதைப் பொருட்கள் வரை நாட்டில் பரவி வருகின்றன. டாஸ்மாக், சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் தாங்க முடியாத சிரமங்களை எதிர்கொண்டு

வருகின்றனர்.

வெம்பக்கோட்டை பகுதியில் தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் குளிரூட்டப்பட்ட மருத்துவமனை தேவைப்படுகிறது.

பட்டாசு விபத்துகளை தடுப்பதற்காக ஆய்வுகள் மேற்கொண்டு, மத்திய மற்றும் மாநில

அரசுகள் இணைந்து நல்ல முடிவுகளை எடுப்பார்கள்.

தமிழக மக்கள், மத்திய மற்றும்

மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் மட்டுமே நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam