Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
அண்ணல் அம்பேத்கரின் 136-ஆம் பிறந்த நாளில் அவரின் சமூகநீதிக் கனவை நனவாக்க உறுதியேற்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டியுமான அண்ணல் அம்பேத்கரின் 136-ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகநீதியின் அடையாளமாகத் திகழும் அவரை போற்றி வணங்குகிறேன்.
அண்ணல் அம்பேத்கர் இல்லாமல் இந்தியாவில் சமூகநீதி அரசியல் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் யார்? என்பதே அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான பிரிவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க வைத்தவர். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து தமது மத்திய அமைச்சர் பதவியை உதறித் தள்ளியவர்.
அனைவருக்கும் சமூகநீதி என்ற அவரது கனவை நனவாக்க இன்னும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
அவரது கனவை நனவாக்கவும், அதற்கான பயணத்தின் வேகத்தை அதிகரிக்கவும் இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN