Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 ஏப்ரல் (ஹி.ச.)
இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை முதல் ஆண்டு துவங்கியது. இதனையடுத்து தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இன்று அதிகாலையில் கனிவகைகள், கண்ணாடி ஆகியவை வைத்து வழிபாடு நடத்தி, புத்தாடை அணிந்து தமிழ்புத்தாண்டை வழிபாடு நடத்தி வரவேற்றனர். இந்நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை பழனி கோவில் திறக்கப்பட்டு கோவிலைச் சுற்றி மலர் அலங்காரத்துடனும் பழங்களால் ஆன தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகளுடன் செய்யப்பட்டு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கபட்டனர்.
மலைக்கோவில் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம், ஆகியவற்றில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் ,
மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சிறப்பு கட்டண பூஜை வரிசைகளிலும் காத்திருந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகிறனர்.
Hindusthan Samachar / ANANDHAN