Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று ஜாத்திரை திருவிழா நடைபெறுகிறது இந்த திருவிழாவில் 150 க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி அம்மனை வழிபடுவது வழக்கம்.
இன்று இந்த விழாவில்
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்டார் வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
சௌமியா அன்புமணியின் இரண்டு மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா இருவரும் காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருவிழாவுக்கு வருகை புரிந்தா பொதுமக்கள் சந்தித்து, தங்களது தாய் சௌமியாவுக்காக மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தனது தாய் செயல்படுவார் என கூறி, வாக்கு சேகரித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ